தேவையான பொருட்கள்
- சிக்கன்
- ரவை
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- பூண்டு
- மஞ்சள் தூள்
- தக்காளி
- கறி மசாலா தூள்
- சிக்கன் மசாலா பொடி
- எண்ணெய்
- கடுகு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
செய்முறை
ஒரு கடாயில் 2 கப் ரவை உடன் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில் 50 மில்லி எண்ணெய் சேர்த்து ஒரு ஸ்பூன் கடுகு, கடுகு பொரிந்த உடன் ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
100 கிராம் பொடியாக வெட்டிய சிக்கன், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
ரவை எடுத்த அதே கப்பில் நான்கு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து இறக்கவும்.
