ஜிலேபி

தேவையான பொருட்கள்

  • உளுந்து பருப்பு
  • அரிசி மாவு
  • சர்க்கரை
  • எண்ணெய்
  • கேசரி பவுடர்

செய்முறை

200 கிராம் உளுந்து பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி பின்பு அரைக்கவும்.

அரைத்த உளுந்து பருப்பு மாவுடன், இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, மற்றும் 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 கிராம் சர்க்கரை மற்றும் 500 மில்லி தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு சர்க்கரை பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

ஒரு வெள்ளை துணியின் நடுவில் சிறியதாக ஓட்டை போட்டு, அரைத்து வைத்துள்ள மாவை அதில் வைத்து பிழியுமாறு கையில் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் 200 மில்லி எண்ணெய் சேர்த்து, எண்ணெய் மிதமாக காய்ந்தவுடன் அரைத்து வைத்துள்ள மாவை அதில் பிழியவும்.

வேகவைத்து எடுத்த ஜிலேபியை சர்க்கரைப் பாகில் சேர்த்து ஊற வைக்கவும்.

Previous Post Next Post