இனிப்பு பூந்தி

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு
  • மைதா
  • சர்க்கரை
  • கேசரி பவுடர்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 300 கிராம் சர்க்கரை மற்றும் 300 மில்லி தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு சர்க்கரை பாகு தயார் செய்யவும்.

ஒரு பாத்திரத்தில் 200 கிராம் கடலை மாவு, 50 கிராம் மைதா, 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் 200 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், அகலமான சட்டுகத்தில் மாவை ஊற்றி பூந்தி எண்ணெயில் விழும்படி மாவை தேய்த்து விடவும்.

பின் பொரித்த பூந்தியை எடுத்து தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப்பாகில் போட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து எடுக்கவும்.

Previous Post Next Post