தேவையான பொருட்கள்
- கொள்ளு பருப்பு
- தக்காளி
- பச்சை மிளகாய்
- பூண்டு
- பெருங்காயத்தூள்
- சீரகம்
- கொத்தமல்லி
- நல்லெண்ணெய்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி
- புளி
செய்முறை
ஒரு குக்கரில் 100 கிராம் கொள்ளு பருப்பு, மூன்று டம்ளர் தண்ணீர், இரண்டு பச்சை மிளகாய், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் கொத்தமல்லி, இரண்டு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு விசில் விடவும்.
பின்னர், இதில் சேர்த்துள்ள தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சேர்த்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாயை எடுத்து அதனுடன் சிறிதளவு புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த தக்காளி மற்றும் பச்சை மிளகாயை வடிகட்டி வைத்துள்ள கொள்ளு தண்ணீரில் சேர்த்து இதனுடன் தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை கொதிக்க வைக்க தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.
