தேவையான பொருட்கள்
- மிளகு
- தக்காளி
- புளி
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
- பூண்டு
- சீரகம்
- காய்ந்த மிளகாய்
- சின்ன வெங்காயம்
- வெந்தயம்
- கடலைப்பருப்பு
- நல்லெண்ணெய்
- உப்பு
- கடுகு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வெந்தயம், மற்றும் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
நெல்லிக்காய் அளவு புளி எடுத்து அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய், எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் கடுகு, நான்கு சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு தக்காளி, ஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர், இதனுடன் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு மற்றும் நான்கு பல் பூண்டை தட்டி சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்த உடன் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
