தேவையான பொருட்கள்
- புளி
- தக்காளி
- சீரகம்
- மிளகு
- பூண்டு
- காய்ந்த மிளகாய்
- சின்ன வெங்காயம்
- மஞ்சள் தூள்
- பெருங்காயத்தூள்
- உப்பு
- எண்ணெய்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
50 கிராம் புளியுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பின், ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு கைப்பிடி கருவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய், நான்கு சின்ன வெங்காயம், மற்றும் இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, நான்கு பல் பூண்டை அம்மியில் வைத்துத் தட்டி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும். பின் ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். வதங்கிய பின் புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
