தேவையான பொருட்கள்
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- சீரகம்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- பூண்டு
- தோசை மாவு
- உப்பு
செய்முறை
இரண்டு தக்காளி, நான்கு சின்ன வெங்காயம், 1 ஸ்பூன் சீரகம், இரண்டு பல் பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கப் தோசை மாவுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
கலந்து வைத்துள்ள மாவை தோசை கல்லில் ஊற்றி தோசையாக சுடவும்.
