பச்சைப்பயிறு தோசை

தேவையான பொருட்கள்

  • பச்சைப்பயிறு
  • தோசை மாவு
  • இஞ்சி
  • பூண்டு
  • சீரகம்
  • மஞ்சள் தூள்
  • பச்சை மிளகாய்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

50 கிராம் பச்சைப் பயிறை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறவைத்த பச்சைப்பயிறுடன், சிறிதளவு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கருவேப்பிலை, மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கப் தோசை மாவுடன் அரைத்து வைத்துள்ள பச்சைப்பயிறு மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

கலந்து வைத்துள்ள மாவை தோசை கல்லில் ஊற்றி வேக வைக்கவும்.

Previous Post Next Post