தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள்

  • தக்காளி
  • பெரிய வெங்காயம்
  • தேங்காய்
  • காய்ந்த மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • பச்சை மிளகாய்
  • சோம்பு
  • கடுகு
  • மல்லி
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி

செய்முறை

ஒரு கடாயில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய், சிறிதாக நறுக்கிய 1 பெரிய வெங்காயம், 4 தக்காளி, 4 காய்ந்த மிளகாய், 2 ஸ்பூன் மல்லி, மற்றும் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

இவற்றை நன்கு வதக்கி ஆற வைத்த பின் இதனுடன் 1 தேங்காய் மற்றும் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு கடாயில் 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்தவுடன் 1 ஸ்பூன் சோம்பு, நீளமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அரைத்து வைத்துள்ள மசாலா‌ சேர்த்து அதனுடன் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து விடவும். பத்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

இறுதியாக கொத்தமல்லி சேர்க்கவும்.

Previous Post Next Post