தேவையான பொருட்கள்
- பூசணிக்காய்
- தக்காளி
- துவரம் பருப்பு
- பாசிப்பருப்பு
- தேங்காய்
- பூண்டு
- காய்ந்த மிளகாய்
- மஞ்சள் தூள்
- சின்ன வெங்காயம்
- சீரகம்
- கடுகு
- புளி
- உப்பு
- நல்லெண்ணெய்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி
செய்முறை
1 கப் துருவிய தேங்காய், 2 பல் பூண்டு, 4 காய்ந்த மிளகாய், 1 ஸ்பூன் சீரகம், மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
குக்கரில் 100 கிராம் துவரம்பருப்பு மற்றும் 50 கிராம் பாசிப்பருப்பு, இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஒரு கடாயில் 50 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் 1 ஸ்பூன் கடுகு மற்றும் 1 ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். 2 காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 10 சின்ன வெங்காயம், மற்றும் பொடியாக நறுக்கிய 2 தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய 100 கிராம் பூசணிக்காய் சேர்க்கவும், அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்க தொடங்கியவுடன் அரை டம்ளர் அளவு புளி கரைசல் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி சேர்க்கவும்.
