தேவையான பொருட்கள்
- மைதா
- சர்க்கரை பவுடர்
- தயிர்
- வெண்ணிலா எசன்ஸ்
- எண்ணெய்
- ஃப்ரூட் ஜாம்
- தேன்
- ட்ரை கோக்கனட்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தயிர், 1/2 கப் எண்ணெய், 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், ஒரு கப் சர்க்கரை பவுடர், ஒரு கப் மைதா சேர்த்து மாவு கட்டி இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ள கேக் மாவை 40 நிமிடம் ஓவனில் வைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் 1/2 கப் சர்க்கரை, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்யவும். தயார் செய்த சர்க்கரை பாகுடன் 50 மில்லி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
தயார் செய்து வைத்துள்ள கேக்கின் நடுவில் இரண்டு பாகங்களாக வருமாறு வெட்டி, கேக்கின் நடுவில் மற்றும் அதன் மேலும் சர்க்கரை பாகு சேர்க்கவும்.
கேக்கின் மேல் ஃப்ரூட் ஜாம் சேர்த்து அதனுடன் ட்ரை கோக்கனட் சிறிதளவு தூவவும்.
