சாக்லேட் கேக்

தேவையான பொருட்கள்

  • மைதா
  • கொக்கோ பவுடர்
  • சர்க்கரை பவுடர்
  • வெண்ணிலா எசன்ஸ்
  • முட்டை
  • எண்ணெய்
  • பேக்கிங் பவுடர்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டை ஊற்றி பீட்டர் வைத்து நன்கு பீட் செய்யவும் அல்லது மிக்ஸியில் ஊற்றி ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் 1/2 கப் எண்ணெய், 1 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு கப் மைதா, ஒரு கப் கொக்கோ பவுடர், ஒரு கப் சர்க்கரை பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

கலந்து வைத்துள்ள மாவை 40 நிமிடங்கள் ஓவனில் வைத்து எடுக்கவும் அல்லது குக்கரில் எண்ணெய் தடவி அதன்மேல் பட்டர் சீட் வைத்து பின்பு அதன் மேல் மாவை ஊற்றி விசில் போடாமல் வேக வைக்கவும்.

தேவைப்பட்டால், இறுதியாக சாக்லேட் கிரீம் சேர்க்கவும்.


Previous Post Next Post