குக்கர் கேக்

தேவையான பொருட்கள்

  • மைதா
  • முட்டை
  • சர்க்கரை பவுடர்
  • வெண்ணிலா எசன்ஸ்
  • எண்ணெய்
  • பட்டர் சீட்
  • பேக்கிங் பவுடர்

செய்முறை

இரண்டு முட்டைகளை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பீட்டர் வைத்து நன்கு பீட் செய்யவும் அல்லது மிக்ஸியில் ஊற்றி ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் ஒரு கப் மைதா, 1/2 கப் சர்க்கரை பவுடர், 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு குக்கரில் நன்கு எண்ணெய் தடவி, அதன் மேல் கேக் மாவு குக்கரில் படாமல் இருக்குமாறு பட்டர் சீட் வைத்து தயார் செய்து வைத்துள்ள கேக் மாவை அதன்மேல் ஊற்றி குக்கரில் விசில் போடாமல் 20 நிமிடம் வேக வைக்கவும்.


Previous Post Next Post