தேவையான பொருட்கள்
- கம்பு
- தயிர்
- உப்பு
- பெரிய வெங்காயம்
செய்முறை
ஒரு மண் பானையில் (அல்லது அடி கனமான பாத்திரத்தில்) ஐந்து டம்ளர் தண்ணீர் சேர்த்து, தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் ஒரு கப் உடைத்த கம்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும்.
கம்பு நன்கு கொதித்த உடன் அடுப்பை மெதுவாக வைத்து 1/2 மணி நேரம் வேக வைக்கவும்.
ஆறிய பின், ஒரு கப் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இறுதியாக தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மேலே தூவிக் கொள்ளவும்.
