பீட்ரூட் சட்னி

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட்
  • கடலைப்பருப்பு
  • உளுந்து பருப்பு
  • புளி
  • சின்ன வெங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • தக்காளி
  • கருவேப்பிலை
  • சீரகம்
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • கொத்தமல்லி இலை
  • தேங்காய்

செய்முறை

ஒரு கடாயில் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தோல் சீவி நறுக்கிய பீட்ரூட் 1 சேர்த்து எண்ணெயில் நன்கு பொரிக்கவும்.

இதனுடன் பத்து சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு கைப்பிடி கடலைப்பருப்பு, ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு புளி, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

வதக்கிய பின் ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

Previous Post Next Post