மைதா கேக்

தேவையான பொருட்கள்

  • மைதா
  • சர்க்கரை
  • நெய்
  • ஏலக்காய் பொடி
  • பால் பவுடர்

செய்முறை

ஒரு அடி கனமான பாத்திரத்தில் 500 கிராம் சர்க்கரை சேர்த்து அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.

200 கிராம் மைதா, 50 கிராம் பால் பவுடர், 50 மில்லி நெய் சேர்த்து அடி பிடிக்காமல் இறுகி வரும் வரை நன்கு கிளறவும்.

இறுதியாக ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து ஒரு தட்டில் ஊற்றி ஆற வைக்கவும். பின்னர் சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.


Previous Post Next Post