தேவையான பொருட்கள்
- வெந்தயக் கீரை
- பாசிப்பருப்பு
- தக்காளி
- பூண்டு
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய்
- சீரகம்
- நல்லெண்ணெய்
- கருவேப்பிலை
செய்முறை
ஒரு குக்கரில் ஒரு டம்ளர் பாசிப்பருப்பு சேர்த்து அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரை விடவும்.
பின், ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் சீரகம், பத்து சின்ன வெங்காயம், ஒரு பல் பூண்டு, நான்கு பச்சை மிளகாய், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
ஒரு கப் வெந்தயக் கீரை, வேக வைத்துள்ள பாசிப்பருப்பு (நீரை வடிக்காமல்), மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
