தேவையான பொருட்கள்
- அரிசி மாவு
- பொட்டுக்கடலை மாவு
- வேர்க்கடலை
- எள்
- நல்லெண்ணெய்
- பெருங்காயத்தூள்
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
ஒரு கப் அரிசி மாவு, 1/2 கப் பொட்டுக்கடலை மாவு, ஒரு ஸ்பூன் எள், ஒரு கைப்பிடி தோல் நீக்கிய வேர்கடலை, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், நல்லெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
இந்த மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து மெல்லிசாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
