புளி சாதம்

தேவையான பொருட்கள்

  • புளி
  • வேர்க்கடலை
  • கடலைப்பருப்பு
  • காய்ந்த மிளகாய்
  • பூண்டு
  • உளுந்து பருப்பு
  • மிளகு
  • எள்ளு
  • வெந்தயம்
  • மஞ்சள் தூள்
  • கருவேப்பிலை
  • நல்லெண்ணெய்
  • உப்பு

செய்முறை

அரைக்க

ஒரு கடாயில் 4 காய்ந்த மிளகாய், 2 ஸ்பூன் கடலைப்பருப்பு, 1 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் எள்ளு, மற்றும் 1/2 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்கு வறுக்கவும். வறுத்த பின் இவற்றை நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

புளி கரைசல்

50 கிராம் புளியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

தாளிக்க

ஒரு கடாயில் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின் 1 ஸ்பூன் உளுந்து பருப்பு, 1/2 ஸ்பூன் வெந்தயம், சிறிதளவு கறிவேப்பிலை, 2 காய்ந்த மிளகாய், 10 பல் சிறிதாக நறுக்கிய பூண்டு, மற்றும் இதனுடன் 1 ஸ்பூன் கடலைப்பருப்பு, 25 கிராம் தோல் நீக்கிய வேர்க்கடலை சேர்த்து எண்ணெயில் வதக்கவும்.

வதங்கிய பின் புளி கரைச்சலுடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியில் 4 ஸ்பூன் அளவு சேர்க்கவும்.

எண்ணெய் தனியாக பிரிந்து வந்தவுடன் இரண்டு கப் சாதம் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

Previous Post Next Post