மைதா சிப்ஸ்

தேவையான பொருட்கள்

  • மைதா
  • கோதுமை மாவு
  • கேசரி பவுடர்
  • உப்பு
  • எள்
  • எண்ணெய்
  • வெண்ணெய்

செய்முறை

ஒரு கப் மைதா, 1/2 கப் கோதுமை மாவு, 1/2 ஸ்பூன் கேசரி பவுடர், 25 கிராம் வெண்ணெய், ஒரு ஸ்பூன் எள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

கலந்து வைத்த மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

தயார் செய்து வைத்துள்ள மாவை மெல்லிசாக விரித்து சிறிய துண்டுகளாக வெட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post