தேவையான பொருட்கள்
- புடலங்காய்
- கடலைப்பருப்பு
- தக்காளி
- சோம்பு
- மஞ்சள் தூள்
- தேங்காய்
- பூண்டு
- கடுகு
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- பெரிய வெங்காயம்
- எண்ணெய்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு குக்கரில் 100 கிராம் கடலைப்பருப்பு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரை வேக வைக்கவும்.
ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பல் பூண்டு, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின், ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து கடுகு பொரிந்த உடன், ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின் ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
100 கிராம் புடலங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வேக வைத்துள்ள கடலைப்பருப்பு (நீரை வடிக்காமல்), ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். இவற்றை ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
