தேவையான பொருட்கள்
- பிரியாணி அரிசி
- கேரட்
- பீன்ஸ்
- பச்சை பட்டாணி
- காலிஃப்ளவர்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- தக்காளி
- புதினா
- கொத்தமல்லி இலை
- சிக்கன் மசாலா பொடி
- பிரியாணி மசாலா பொடி
- கறி மசாலா தூள்
- எண்ணெய்
- நெய்
- சோம்பு
- ஏலக்காய்
- பிரியாணி இலை
- பட்டை
- இஞ்சி-பூண்டு விழுது
- கல்பாசி
- தயிர்
- எலுமிச்சை
- உப்பு
செய்முறை
ஒரு குக்கரில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, பிரியாணி இலை, சிறிதளவு கல்பாசி, ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும். இவை வதங்கிய பின் மூன்று தக்காளி சேர்த்து வதக்கவும்.
கேரட் மற்றும் பீஸ் சேர்த்து மொத்தமாக ஒரு கப், பச்சை பட்டாணி மற்றும் காலிஃப்ளவர் மொத்தமாக சேர்த்து ஒரு கப், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும்.
பின்னர், இரண்டு கப் அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும் இதனுடன் நான்கு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு விசில் வரும் வரை சமைக்கவும். இறுதியாக 5 ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
