தேவையான பொருட்கள்
- சீரக சம்பா அரிசி
- உருளைக்கிழங்கு
- கேரட்
- பீன்ஸ்
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய்
- தக்காளி
- காய்ந்த மிளகாய்
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
- பட்டை
- பிரியாணி இலை
- கல்பாசி
- எண்ணெய்
- நெய்
- தயிர்
- எலுமிச்சை
- ஏலக்காய்
- புதினா
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில் 25 கிராம் இஞ்சி, ஆறு பல் பூண்டு, நான்கு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஏலக்காய் சேர்த்து அம்மியில் வைத்து அரைக்கவும்.
பின்னர், ஒரு மண்பானையில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, பிரியாணி இலை, பத்து சின்ன வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், அம்மியில் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து வதக்கவும். இவை வதங்கிய பின் ஒரு கைப்பிடி புதினா, மூன்று தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கேரட், பீன்ஸ், மற்றும் உருளைக்கிழங்கு இவை அனைத்தும் சேர்த்து ஒரு கப் அளவு, இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
சேர்த்துள்ள காய்கள் நன்கு வதங்கிய பின், இரண்டு டம்ளர் சீரக சம்பா அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து சேர்க்கவும் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஐந்து டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
இவை கொதிக்க தொடங்கியதும் அடுப்பை மெதுவாக வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும். அரிசி நன்கு வெந்தவுடன், ஐந்து ஸ்பூன் நெய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின், நன்கு கிளறவும்.
