ஸ்வீட் கார்ன் பிரியாணி

தேவையான பொருட்கள்

  • ஸ்வீட் கார்ன்
  • பிரியாணி அரிசி
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • தக்காளி
  • இஞ்சி-பூண்டு விழுது
  • தயிர்
  • எலுமிச்சை
  • எண்ணெய்
  • நெய்
  • சோம்பு
  • பட்டை
  • ஏலக்காய்
  • அன்னாசி பூ
  • கல்பாசி
  • புதினா
  • உப்பு
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு குக்கரில் 50 மில்லி எண்ணெய், 50 மில்லி நெய் சேர்த்து காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, பிரியாணி இலை, ஒரு ஏலக்காய், இரண்டு அன்னாசி பூ, சிறிதளவு கல்பாசி, இரண்டு பெரிய வெங்காயம், ஆறு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் மூன்று தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கிய பின், ஒரு கப் ஸ்வீட் கார்ன், இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும்.

பின்னர், இரண்டு கப் பிரியாணி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சேர்க்கவும்.‌ இதனுடன் நான்கு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு விசில் விடவும்.

Previous Post Next Post