ராகி சேமியா

தேவையான பொருட்கள்

  • ராகி சேமியா
  • தேங்காய்
  • எண்ணெய்
  • பச்சை மிளகாய்
  • கடுகு
  • பெரிய வெங்காயம்
  • கடலைப்பருப்பு
  • வேர்க்கடலை
  • கருவேப்பிலை

செய்முறை

200 கிராம் ராகி சேமியாவை தண்ணீரில் நனைத்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.

ஒரு கடாயில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் 1 ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு ஸ்பூன் வேர்க்கடலை, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின்னர், ஒரு கப் துருவிய தேங்காய், வேக வைத்துள்ள ராகி சேமியா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

Previous Post Next Post