தயிர் சேமியா

தேவையான பொருட்கள்

  • சேமியா
  • தயிர்
  • சின்ன வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • பாசிப்பருப்பு
  • கடலைப்பருப்பு
  • எண்ணெய்
  • மாதுளை பழம்
  • கடுகு
  • இஞ்சி
  • கருவேப்பிலை

செய்முறை

ஒரு கடாயில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், ஐந்து சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு கப் தயிர், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ‌ கொதிக்க வைக்கவும். கொதிக்க தொடங்கியவுடன் 250 கிராம் சேமியா சேர்த்து கிளறவும். இறுதியாக மாதுளை சேர்க்கவும்.

Previous Post Next Post