ரவா உப்புமா

தேவையான பொருட்கள்

  • கோதுமை ரவை
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • கேரட்
  • பீன்ஸ்
  • இஞ்சி
  • கடலைப்பருப்பு
  • எண்ணெய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், நான்கு ஸ்பூன் கடலை பருப்பு, சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கிய பின், கேரட் மற்றும் பீன்ஸ் இரண்டும் சேர்த்து ஒரு கப் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

சேர்த்துள்ள காய்கள் நன்கு வெந்த பின், 500 மில்லி தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதிக்க தொடங்கியவுடன் 250 கிராம் ரவை சேர்த்து நன்கு வேக வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி சேர்க்கவும்.

Previous Post Next Post