தேவையான பொருட்கள்
- தேங்காய்
- பொட்டுக்கடலை
- இஞ்சி
- பூண்டு
- பச்சை மிளகாய்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- கடுகு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு கப் பொட்டுக்கடலை, நான்கு பச்சை மிளகாய், ஒரு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, சிறிதளவு கருவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ஒரு ஸ்பூன் கடுகு மற்றும் ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதனை அரைத்து வைத்துள்ள தேங்காய் சட்னியுடன் கலந்து கொள்ளவும்.
