தேவையான பொருட்கள்
- முள்ளங்கி
- சின்ன வெங்காயம்
- தேங்காய்
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- சீரகம்
- தக்காளி
- புளி
- காய்ந்த மிளகாய்
- நல்லெண்ணெய்
- கடுகு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
செய்முறை
ஒரு கடாயில் 1 நறுக்கிய முள்ளங்கி மற்றும் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
வதங்கிய பின் 50 கிராம் சின்ன வெங்காயம், 25 கிராம் கடலைப்பருப்பு, ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின் ஆறவைத்து அதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு காய்ந்த மிளகாய் மற்றும் ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து தாளித்து இதனை அரைத்து வைத்துள்ள முள்ளங்கி சட்னியுடன் சேர்க்கவும்.
