மசாலா ரசம்

தேவையான பொருட்கள்

  • புளி
  • தக்காளி
  • கொத்தமல்லி
  • சீரகம்
  • மிளகு
  • கொள்ளு பருப்பு
  • சுக்கு
  • பூண்டு
  • மஞ்சள் தூள்
  • பெருங்காயத்தூள்
  • காய்ந்த மிளகாய்
  • நல்லெண்ணெய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் கொத்தமல்லி, நான்கு பல் பூண்டு, சிறிதளவு சுக்கு, சிறிதளவு புளி, இரண்டு ஸ்பூன் கொள்ளு பருப்பு, மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் 1/2 ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்த உடன் இரண்டு காய்ந்த மிளகாய், மற்றும் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்த உடன் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post