அடை தோசை

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு
  • கடலைப்பருப்பு
  • பச்சைப்பயிறு
  • தட்டைப்பயிறு
  • உளுந்து பருப்பு
  • அரிசி
  • சீரகம்
  • காய்ந்த மிளகாய்
  • பூண்டு
  • பச்சை மிளகாய்
  • சின்ன வெங்காயம்
  • பெரிய வெங்காயம்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • பெருங்காயத்தூள்
  • மஞ்சள் தூள்

செய்முறை

ஒரு கப் துவரம் பருப்பு, ஒரு கப் கடலை பருப்பு, ஒரு கப் பச்சைப்பயிறு, ஒரு கப் தட்டைப்பயிறு, 1/2 கப் அரிசி, மற்றும் அரை கப் உளுந்து பருப்பை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்துள்ள பருப்புடன் 10 சின்ன வெங்காயம், 1 ஸ்பூன் சீரகம், இரண்டு பல் பூண்டு, நான்கு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த அடை தோசை மாவுடன் சிறிதாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், சிறிதாக நறுக்கிய கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இதனுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இரண்டு மணி நேரம் கழித்து இதனை தோசை கல்லில் ஊற்றி வேக வைக்கவும்.

Previous Post Next Post