குலோப்ஜாம்

தேவையான பொருட்கள்

  • குலோப்ஜாம் மாவு
  • சர்க்கரை
  • பால்
  • எண்ணெய்/நெய்
  • பாதாம் பருப்பு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில், 500 கிராம் சர்க்கரை, மற்றும் 500 மில்லி தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு சர்க்கரை பாகு காய்ச்சி வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில், 100 கிராம் குலோப்ஜாம் மாவு, மற்றும் 50 மில்லி பால் சேர்த்து நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் 200 கிராம் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் உருட்டி வைத்துள்ள குலோப்ஜாம் உருண்டைகளை எண்ணெயில் அல்லது நெய்யில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும்.

பொரித்து வைத்துள்ள குலோப் ஜாம் உருண்டைகளை தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப்பாகில் போட்டு நன்கு ஊற வைக்கவும்.

ஊற வைத்த பின் பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி மேலே தூவி விடவும்.

Previous Post Next Post