மிக்சர்

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு
  • வேர்க்கடலை
  • பொட்டுக்கடலை
  • அவல்
  • மிளகாய்த்தூள்
  • உப்பு
  • பெருங்காயத்தூள்
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • பூண்டு
  • கருவேப்பிலை

செய்முறை

300 கிராம் கடலை மாவு, 1/2 ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

தயார் செய்து வைத்துள்ள மாவை மிக்சர் அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து பொரிக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் 50 கிராம் கடலை மாவு, 1/4 ஸ்பூன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

கரைத்து வைத்துள்ள மாவை எண்ணெயில் பூந்தியாக பொரித்து எடுக்கவும்.

பின், 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பொட்டுக்கடலை, 25 கிராம் அவல், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, 10 பல் பூண்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

பிறகு, தயார் செய்து வைத்துள்ள அனைத்தையும் நன்கு கலந்து இதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

Previous Post Next Post