ராகி பக்கோடா

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு
  • வேர்க்கடலை
  • பொட்டுக்கடலை
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • காய்ந்த மிளகாய்
  • சோம்பு
  • பெருங்காயத்தூள்
  • முருங்கைக்கீரை
  • எண்ணெய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 250 கிராம் ராகி மாவு, 50 கிராம் பொட்டுக்கடலை, 50 கிராம் தோல் நீக்கிய வேர்கடலை, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள்,‌ இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை, சிறிதளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

தயார் செய்து வைத்துள்ள மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Previous Post Next Post