தேவையான பொருட்கள்
- சிக்கன் குருமா
- தோசை மாவு
- மிளகுத்தூள்
- நல்லெண்ணெய்
- கொத்தமல்லி இலை
செய்முறை
தோசை கல்லில் தோசை ஊற்றி, நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து தோசையை நன்கு மெல்லிசாக பரப்பிய பின், ஒரு கப் சிக்கன் குருமாவை அதன்மேல் ஊற்றி நன்கு பரப்பவும்.
இதன் மேல் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி விடவும்.
தோசையை நன்கு வேகவைத்து திருப்பி போடாமல் மடித்து எடுக்கவும்.
