காளான் பிரியாணி

தேவையான பொருட்கள்

  • காளான்
  • பிரியாணி அரிசி
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • புதினா
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்
  • நெய்
  • உப்பு
  • கறி மசாலா தூள்
  • பிரியாணி மசாலா பொடி
  • சிக்கன் மசாலா பொடி
  • தயிர்
  • எலுமிச்சை
  • சோம்பு
  • பிரியாணி இலை
  • பட்டை
  • அன்னாசி பூ
  • கல்பாசி
  • ஏலக்காய்

செய்முறை

ஒரு குக்கரில் 50 மில்லி எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, பிரியாணி இலை, ஒரு ஏலக்காய், சிறிதளவு கல்பாசி, இரண்டு அன்னாசி பூ சேர்த்து இதனுடன் ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி புதினா, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், மூன்று தக்காளி சேர்த்து வதக்கவும்.

200 கிராம் காளான், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்த விடவும்.

2 கப் பிரியாணி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து சேர்க்கவும் இதனுடன் நான்கு டம்ளர் தண்ணீர், சிறிதளவு கொத்தமல்லி இலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். இதனை ஒரு விசில் வரும் வரை சமைக்கவும். இறுதியாக நான்கு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.

Previous Post Next Post