சிக்கன் சில்லி பிரியாணி

தேவையான பொருட்கள்

  • சிக்கன்
  • பாஸ்மதி அரிசி
  • தனியாத்தூள்
  • மிளகுத்தூள்
  • மஞ்சள் தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • சோள மாவு
  • எலுமிச்சை
  • தயிர்
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • புதினா
  • நெய்
  • எண்ணெய்
  • சோம்பு
  • உப்பு
  • பட்டை
  • பிரியாணி இலை
  • கறி மசாலா தூள்
  • பிரியாணி மசாலா தூள்
  • சிக்கன் மசாலா தூள்
  • கொத்தமல்லி இலை

செய்முறை

300 கிராம் சிக்கன், ஒரு ஸ்பூன் தனியாத்தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

கலந்து வைத்துள்ள சிக்கனை எண்ணெயில் பொரிக்கவும்.

ஒரு குக்கரில் 50 மில்லி எண்ணெய் நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் சோம்பு, பிரியாணி இலை, ஒரு பட்டை சேர்த்து சோம்பு பொரிந்த உடன் ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும். பின், பொடியாக நறுக்கிய தக்காளி இரண்டு சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கிய பின், இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி, 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

இதனுடன் இரண்டு டம்ளர் பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து சேர்க்கவும். மூன்று டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு விசில் வரும்வரை வேக வைக்கவும்.

பின்னர், இறுதியாக பொரித்து வைத்துள்ள சிக்கன் சேர்த்து கிளறவும்.

Previous Post Next Post