தேவையான பொருட்கள்
- முட்டை
- பிரியாணி அரிசி
- மிளகுத்தூள்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி-பூண்டு விழுது
- தக்காளி
- புதினா
- பிரியாணி மசாலா பொடி
- பச்சை மிளகாய்
- நெய்
- எண்ணெய்
- சோம்பு
- பட்டை
- பிரியாணி இலை
- உப்பு
செய்முறை
ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய், நான்கு முட்டை, மற்றும் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு பொரிக்கவும்.
ஒரு குக்கரில் 50 மில்லி எண்ணெய், நான்கு ஸ்பூன் நெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, பிரியாணி இலை சேர்த்து சோம்பு பொரிந்த உடன் இரண்டு நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர், பொரித்து வைத்துள்ள முட்டை, இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
இதனுடன் இரண்டு டம்ளர் பிரியாணி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும். நான்கு டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். இவற்றை ஒரு விசில் வரும் வரை சமைக்கவும்.
