தேவையான பொருட்கள்
- அவல்
- பச்சைப் பயிறு
- தட்டைப் பயிறு
- வேர்க்கடலை
- கடலைப்பருப்பு
- பாசிப்பருப்பு
- உப்பு
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- கருவேப்பிலை
- எண்ணெய்
செய்முறை
ஒரு கடாயில் 250 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், 50 கிராம் அவல் போட்டு பொரிக்கவும்.
மேலும், 50 கிராம் பச்சை வேர்க்கடலை, 50 கிராம் கடலைப்பருப்பு, 50 கிராம் தட்டைப் பயிறு, 50 கிராம் பாசிப்பருப்பு, 50 கிராம் பச்சை பயிறு, ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து தனித்தனியாக பொரிக்கவும்.
பொரித்து வைத்துள்ள அனைத்து பருப்பையும் அவலுடன் நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, தேவையான அளவு மிளகாய்த்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
