தேவையான பொருட்கள்
- மணத்தக்காளி கீரை
- தேங்காய்
- கடலைப்பருப்பு
- சீரகம்
- கடுகு
- காய்ந்த மிளகாய்
- நல்லெண்ணெய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- பெரிய வெங்காயம்
- கருவேப்பிலை
செய்முறை
ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கிய பின், இரண்டு கப் பொடியாக நறுக்கிய மணத்தக்காளி கீரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும். இறுதியாக ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விடவும்.
