தேவையான பொருட்கள்
- வாழைத்தண்டு
- பாசிப்பருப்பு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- கடுகு
- எண்ணெய்
- தேங்காய்
- கருவேப்பிலை
செய்முறை
300 கிராம் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி அதில் உள்ள நாரை நீக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வாழைத்தண்டு, 50 கிராம் பாசிப்பருப்பு, மற்றும் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும்.
ஒரு கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வேக வைத்துள்ள வாழைத்தண்டை தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். இறுதியாக ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும்.
