சிக்கன் லெக் பீஸ்

தேவையான பொருட்கள்

  • சிக்கன் லெக் பீஸ்
  • தனியா தூள்
  • சோள மாவு
  • கடலை மாவு
  • எலுமிச்சை
  • இஞ்சி-பூண்டு விழுது
  • மிளகாய் தூள்
  • மிளகுத்தூள்
  • உப்பு
  • சிக்கன் சில்லி மசாலா
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கடாயில் 200 கிராம் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், 2 சிக்கன் லெக் பீஸ் எண்ணெயில் போட்டு இரண்டு நிமிடம் பொரிக்கவும்.

இரண்டு ஸ்பூன் கடலை மாவு, நான்கு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் சிக்கன் சில்லி மசாலா, இரண்டு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் பாதி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும்.

கலந்து வைத்துள்ள மசாலாவை லெக் பீஸில் சேர்க்கவும்.

மசாலா கலந்து அரை மணி நேரம் நன்கு ஊற வைத்து பின் எண்ணெயில் போட்டு பொரிக்கவும். இறுதியாக பொரித்து வைத்துள்ள லெக் பீஸில் மிளகுத்தூள் சேர்க்கவும்.

Previous Post Next Post