ரவா இட்லி

தேவையான பொருட்கள்

  • ரவை
  • கேரட்
  • பீன்ஸ்
  • பச்சை பட்டாணி
  • முந்திரி
  • நெய்
  • தயிர்
  • உப்பு
  • கொத்தமல்லி இலை
  • கருவேப்பிலை
  • பாசிப்பருப்பு

செய்முறை

ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் நெய், இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு, சிறிதளவு கருவேப்பிலை, மற்றும் கேரட், பீன்ஸ், பட்டாணி (மூன்றும் சேர்த்து ஒரு கப்) சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

200 கிராம் ரவை, மற்றும் 1/2 கப் முந்திரி சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கிளறவும்.

வறுத்து வைத்துள்ள ரவை ஆறிய பின், ஒரு கப் தயிர், சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர், இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.

Previous Post Next Post