மீன் சில்லி


தேவையான பொருட்கள்

  • மீன்
  • தனியா தூள்
  • சோள மாவு
  • கடலை மாவு
  • எலுமிச்சை
  • இஞ்சி-பூண்டு விழுது
  • மிளகாய் தூள்
  • மிளகுத்தூள்
  • உப்பு
  • மீன் சில்லி மசாலா
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்

செய்முறை

300 கிராம் மீனை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

நறுக்கி வைத்துள்ள மீனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள், நான்கு ஸ்பூன் மின் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்‌ தூள், இரண்டு ஸ்பூன் சோள மாவு, பாதி எலுமிச்சை பழத்தின் சாறு, ஒரு ஸ்பூன் கடலை மாவு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இதனை 1/2 மணி நேரம் நன்கு மசாலாவில் ஊறவைத்து. பின், எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இறுதியாக பொரித்து வைத்துள்ள மீனில் மிளகுத்தூள் சேர்க்கவும்.

Previous Post Next Post