கீரை போண்டா

தேவையான பொருட்கள்

  • கீரை
  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • உப்பு
  • சோம்பு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • பெருங்காயத்தூள்
  • எண்ணெய்
  • மிளகாய் தூள்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 200 கிராம் கடலை மாவு, 50 கிராம் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய கீரை ஒரு கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்‌ தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சிறிதளவு, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Previous Post Next Post