வாழைக்காய் பஜ்ஜி

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • வாழைக்காய்
  • மிளகாய் தூள்
  • பெருங்காயத்தூள்
  • சமையல் சோடா
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 200 கிராம் கடலை மாவு, 50 கிராம் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் சமையல் சோடா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும்.

வாழைக்காயை நீளமாக சீவி தயார் செய்து வைத்துள்ள மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.


Previous Post Next Post