அரிசி முறுக்கு

தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு
  • பொட்டுக்கடலை மாவு
  • எள்
  • வெண்ணெய்
  • பெருங்காயத்தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • காய்ந்த மிளகாய்
  • அரிசி

செய்முறை

முதலில் 1/2 டம்ளர் அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைத்து, இதனுடன் நான்கு காய்ந்த மிளகாய், 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 200 கிராம் அரிசி மாவு, 100 கிராம் பொட்டுக்கடலை மாவு, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் எள், 25 கிராம் வெண்ணெய், தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்துள்ள அரிசி மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.

தயார் செய்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும்.

Previous Post Next Post