சிக்கன் லெக் பீஸ் பிரியாணி


தேவையான பொருட்கள்

  • சிக்கன் லெக் பீஸ்
  • பிரியாணி அரிசி
  • நெய்
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • சிக்கன் மசாலா பொடி
  • பிரியாணி மசாலா பொடி
  • தனியா தூள்
  • உப்பு
  • மிளகுத்தூள்
  • எண்ணெய்
  • சோம்பு
  • பட்டை
  • ஏலக்காய்
  • பிரியாணி இலை
  • கறி மசாலா தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது

செய்முறை

முதலில் நான்கு சிக்கன் லெக் பீஸ் உடன் ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.

தயார் செய்து வைத்துள்ள சிக்கன் லெக் பீஸை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

ஒரு குக்கரில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, இரண்டு ஏலக்காய்‌ சேர்த்து சோம்பு பொரிந்த உடன், ஒரு பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி சேர்க்கவும் இதனுடன் இரண்டு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி புதினா, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இவை வதங்கிய பின் இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்னர், இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் லெக் பீஸ், ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி, நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

இதனுடன் இரண்டு டம்ளர் பிரியாணி அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து சேர்க்கவும், நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இவற்றை ஒரு விசில் வரும் வரை சமைக்கவும்.

Previous Post Next Post