தேவையான பொருட்கள்
- முட்டை
- பாஸ்மதி அரிசி
- நெய்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- தக்காளி
- சிக்கன் மசாலா பொடி
- பிரியாணி மசாலா பொடி
- கறி மசாலா தூள்
- சோம்பு
- பட்டை
- ஏலக்காய்
- இஞ்சி-பூண்டு விழுது
- எண்ணெய்
- புதினா
- உப்பு
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஐந்து முட்டையை வேகவைத்து உரித்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, இரண்டு ஏலக்காய் சேர்த்து இவை பொரிந்த உடன், நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர், வேக வைத்துள்ள முட்டை, இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி, 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் இரண்டு டம்ளர் பாஸ்மதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து சேர்க்கவும். இதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை சமைக்கவும்.
இறுதியாக நான்கு ஸ்பூன் நெய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கிளறவும்.
