தேவையான பொருட்கள்
- மீன்
- பிரியாணி அரிசி
- நெய்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- தக்காளி
- புதினா
- மஞ்சள் தூள்
- எலுமிச்சை
- இஞ்சி-பூண்டு விழுது
- பிரியாணி இலை
- சோம்பு
- பட்டை
- பிரியாணி மசாலா பொடி
- மீன் சில்லி மசாலா பொடி
- உப்பு
- மிளகு தூள்
- ஏலக்காய்
- எண்ணெய்
செய்முறை
முதலில் 300 கிராம் மீன் உடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகு தூள், 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து எண்ணெயில் பாதி அளவு பொரித்து எடுக்கவும்.
பின்னர், ஒரு குக்கரில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, இரண்டு ஏலக்காய் சேர்த்து சோம்பு பொரிந்த உடன் சிறிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, நான்கு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி புதினா, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி, இரண்டு ஸ்பூன் மீன் சில்லி மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.
பின்னர், இரண்டு கப் பிரியாணி அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து சேர்க்கவும். இதனுடன் அரிசி எடுத்த அதே கப்பில் நான்கு கப் அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். சேர்த்துள்ள தண்ணீர் கொதிக்க தொடங்கியதும், பொரித்து வைத்துள்ள மீனை இதில் சேர்த்து ஒரு விசில் வரும் வரை சமைக்கவும்.
இறுதியாக நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்.
